பனி காலம்...கவிஞர்களுக்கு பிடிக்கும் கவித்துவமான இந்த காலத்தில் நமக்கு ஆரோக்கிய குறைபாடுகளும் அதிகம் ஏற்படும். பொதுவாக பனி காலத்தில் உணவும் உறக்கமும் அதிகரிப்பது மட்டுமின்றி, சாப்பிடவும் தூங்கவும் மனதுக்கு இதமாக இருக்கும். ஆனால், பனிகாலத்தில் குளிரின் காரணமாக ஜலதோஷம், இருமல், சளி, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களும் எளிதில் நம்மை தாக்கும்.
இதிலிருந்து நாம் தப்பிக்க சில டிப்ஸ்.
குறைந்த அளவுள்ள கொழுப்புச்சத்து உடன் கூடிய உணவை சாப்பிட்டால் போதும். அதிகப்படியான கொழுப்பு உணவுகளை நமது உடல் எளிதில் ஜீரணிக்காது. அதேபோல் உணவில் அதிகப் பால், பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.

அதே போல, குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரோக்கியமான தூக்கம் அவசியம். தினமும் 500 மில்லி கிராம் வைட்டமின் 'சி' சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த' சி' சத்து ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றில் அதிகம் உள்ளது. காய்கறி சூப். கொள்ளு சூப் வைத்து அருந்தலாம்.

மேலும், கதகதப்பான ஆடையை அணியலாம். சூரியன் மறைவுக்கு பின் குளிப்பதை தவிர்க்கவும். ஈரத் தலையுடன் வெளியில் செல்ல வேண்டாம். தினமும் காலை மாலை சூடான நீரில் குளிப்பது நல்லது.
குறிப்பாக உடல்நலக் குறைவுக்கு டாக்டரை கலந்து ஆலோசிக்காமல் நீங்களாகவே மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளவதை தவிர்க்க வேண்டும்.
English Summary
winter season ..! - Things to follow ..!