KOLNews

1000 பேருந்துகள் ..! - காங்கிரஸ் உதவி சென்றடைவதில் சிக்கலை ஏற்படுத்திறதா பாஜக..?

டெல்லி - உ.பி.எல்லையில் சிக்கித் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, காங்கிரஸ் கட்சி1,000 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்திருப்பதாகவும். காசியாபாதில் உள்ள காசிப்பூர் எல்லையில் இருந்து, 500 பஸ்களையும், நொய்டா எல்லையிலிருந்து, 500 பஸ்களையும் இயக்க விரும்புவதாகவும் . இதற்கான முழு செலவையும் காங்கிரஸ் கட்சி ஏற்கும். இதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி உ.பி மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்திருந்தார்.

Yogi Adityanath - Simple English Wikipedia, the free encyclopedia

அதையடுத்து பிரியங்காவின் கடிதத்தை பரிசீலித்த மாநில அரசு, 1,000 பஸ்களை இயக்க, நேற்று முன் தினம் இரவு, அனுமதி அளித்தது. ஆனால், 1,000 பஸ்களின் ஆவணங்கள், தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், அனைத்து பஸ்களும், நேற்று காலை, 10:00 மணிக்குள், லக்னோவில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறியது.

It's everyone's collective duty to help, protect health workers ...

இதற்கு, பிரியங்கா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இது குறித்து, பிரியங்கா சார்பில், அவரது தனி செயலர் சந்தீப் சிங், உ.பி., மாநில அரசுக்கு,கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில், "ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் ஊரை நோக்கி சாலைகளில் குடும்பத்துடன் நடந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மாநில எல்லையில் உள்ள முகாம்களில் காத்து கிடக்கின்றனர். இந்த நேரத்தில், 1,000 காலி பஸ்களை, லக்னோவுக்கு அனுப்புமாறு கூறுவது, நேர விரயம் மட்டுமின்றி, மனிதாபிமானமற்ற செயல்.

இந்த நெருக்கடியான நேரத்தில், இப்படி கேட்பது, மாநில அரசுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்"

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே,  மாநில அமைச்சர் சித்தார்த்நாத் சிங், பஸ்கள் என கூறி, 'டெம்போ' சரக்கு வாகனங்கள், 'ஆட்டோ' மற்றும் இரு சக்கர வாகனங்களின் ஆவணங்களும் வழங்கப்பட்டு இருப்பதாகவும், 

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீது, காங்கிரஸ் தலைவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவே அவர்கள் விரும்புகின்றனர்,'' என்று குற்றம் சாட்டினார்.

English Summary

1000 buses ..! - Does the Bjp giving trouble?

Latest Articles

KOLNews