KOLNews

12ஆம் வகுப்பு தேர்வு..! - மதில் மேல் பூனையாக அதிமுக.?

இந்த கொரோனா கால கட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், இது குறித்து முடிவெடுக்க பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என இந்த மூன்று  தரப்பிலும் கருது கேட்கப்பட்டது. அதில் தேர்வை நடத்துவதற்கு சாதகமே பெரும்பான்மையாக கருத்து தெரிவிக்கப்பட்டது.  அதனையடுத்து சட்டமனற உறுப்பினர்களின் கருத்தை கேட்கும் வகையில் அணைத்து அரசியல் கட்சி சட்டமன்ற பிரதிநிதிகளுடன்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். 

ஆலோசனையின் போது  திமுக , காங்கிரஸ் , மதிமுக , வி.சி.க. , தமிழக வாழ்வுரிமை கட்சி , கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி , மனித நேய மக்கள் கட்சி ஆகிய பெரும்பான்மையான கட்சிகள் பொதுத்தேர்வு நடத்த வேண்டும்  என்றும், பாஜக , பாமக , இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் , புரட்சி பாரதம் ஆகிய 5 கட்சிகள் தேர்வு நடத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளன .அதே போல பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்பதாக அறிவித்துள்ளது . தொடர்ந்து , மருத்துவ வல்லுநர் குழுவுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது .

Live Chennai: The new TN State Govt School Education Minister has a meeting  with concerned officials regarding +2 Public Exam!,Tamil Nadu State  Government School Education, Anbil Mahesh Poyyamozhi, The new Tamil Nadu

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து முதலமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்,  அத்துடன், அனைத்து கருத்துக்களும் எழுத்துப்பூர்வமாக தொகுக்கப்பட்டு அறிக்கையாக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதனை பரிசீலித்து முதலமைச்சர் இறுதி முடிவெடுப்பார் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

அதிமுகவில் உள்ள உட்கட்சி பூசல்கள் சிக்கலாகி வரும் நிலையில், அது தனக்கென ஒரு நிலையப்பாட்டை எடுக்க முடியாத நிலையில் இருப்பதும், அதன், பெரும்பான்மை முடிவுக்கு ஒத்துப்போவதுமான முடிவும், விமர்சனத்துக்கு உள்ளாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

12th class exam ..! - ADMK as a cat on the wall.?

Latest Articles

KOLNews