KOLNews

30 கிலோ தங்க கடத்தல்..! - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு வந்த ரூபாய் 15 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல் சம்பவம் கேரளா மாநிலத்தை பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் 30 அன்று கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு ஒரு பார்சல் வந்துள்ளது. தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து அதிகாரிகள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று தூதரகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது குறிப்பிட்ட ஒரு பார்சலில்  சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருந்துள்ளது அப்போது பார்சலை எடுத்து செல்ல வந்த ஸரித் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். தூதரகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய ஸரித், அண்மையில் பணியிலிருந்து விளக்கப்பட்டுள்ளார். எனினும், தூதரக அதிகாரி என்று கூறி வந்துள்ளார். 

அதையடுத்து நடைபெற்ற தொடர் விசாரணையில், இந்த விவகாரத்தின் பின்னணியில் சுவப்னா சுரேஷ் என்பவர் இருந்தது தெரியவந்துள்ளது. தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து ஷோபனா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டார். தற்போது கேரள அரசின் ஐ டி பிரிவின் செயலாளராக பணியில் உள்ளார். இந்தியாவிலும் சுவப்னா பணியாற்றியுள்ளார் மேலும் அரசின் ஐடி செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

Sivasankar goes on leave after being removed from secretary post ...

தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்ய முடியாது என்பதை பயன்படுத்தி ஸரித் சுவப்னா இருவரும் இந்த கடத்தல் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

இதற்கிடையே, சுவப்னா, கேரள அரசின் ஐடி செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் நெருக்கமானவர் என்பதால், இந்த விவகாரம் தங்க கடத்தல் என்கிற நிலையில் இருந்து அரசியல் தொடர்பு என்கிற தளத்திற்கு சென்றுவிட , அங்குள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

English Summary

30kg gold smuggling ..! - Storm in Kerala politics

Latest Articles

KOLNews