தமிழக அரசு நிவர் புயலை திறமையான முறையில் எதிர்கொண்டு, பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் பார்த்து கொண்டது, பெருமளவில் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், அது தேர்தல் நேரத்தில் அதிமுகவிற்கு சொல்லிக்கொள்ளும் சாதனையாக மாறிவிடும் என்பதால் எதிர்க்கட்சிகள் கொஞ்சம் கலங்கித்தான் போயுள்ளன.
அதனால், அதில் உள்ள குற்றம் குறைகளை தேடிக்கண்டுபிடித்து மக்கள் முன் வைக்கும் முயற்சியில் வழக்கம்போல் திமுக இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக மதகுகள் சரியாக இல்லாததால் 400கன அடி நீர் வீணாக வெளியில் செல்வதாக ஒரு குற்றச்சாட்டை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீரை வெளியேற்ற திறந்துவிடப்பட்ட இரண்டு மற்றும் மூன்றாவது மதகுகள் மூடமுடியாமல் இப்போது 400 கன அடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் செய்த பணி தான் என்ன ? செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று பார்த்த அவர் ஏன் ?. இது குறித்தெல்லாம் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த வில்லை. ஊடகங்கள் புடைசூழ அங்கு சென்றார் எதற்கு எல்லாமே வெற்றி விளம்பரத்திற்கு தானா ? ஏரி மதகுகளை கூட பராமரிக்கும் நிர்வாகத் திறமை என்று முதலமைச்சராக இருந்து இந்த தமிழ்நாட்டை இப்படி படுத்துவதா ? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார் துரைமுருகன்.
English Summary
400 cubic feet of water is wasted ..! - Durai murugan .!