KOLNews

பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன்..! - ரஜினியை 'ரவுண்டு' கட்டும் திமுக..!

நேற்று நடந்த 'துக்ளக்' வார இதழின் பொன்விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த,  'முரசொலி பத்திரிகை ஒருவர் கையில் இருந்தால் அவரை திமுக்காரர் என சொல்லிவிடலாம், துக்ளக் பத்திரிகை கையிலிருந்தால் அறிவாளி என கண்டுபிடித்துவிடலாம்', என பேசியிருந்தார்.

Image result for rajinikanth

இந்நிலையில் அவரின் கருத்துக்கு திமுக எதிர்வினை ஆற்றியுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன்,'உழைக்கும் மக்களே தங்கள் கையில் முரசொலியை வைத்திருப்பார்கள்', என பதில் அளித்துள்ளார். 

Image result for tks elangovan

அதே போல திமுக இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலினும்  தனது ட்விட்டரில் 

'முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார்.

English Summary

A man who is a rational self DMK..! - DMK cornering Rajini

Latest Articles

KOLNews