தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.
அதில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் ஐந்துக்கும் மேற்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது. கிட்டத்தட்ட சமஅளவில் வெற்றிவாய்ப்பு இவை இரண்டு கட்சிகளுமே இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதை ஆம் ஆத்மி கட்சியும் குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை பெறுவதுடன் ஒற்றை இலக்கில் இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
கோவா மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும் என்றும், இங்கும் ஆம் ஆத்மி குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று 2வது இடத்தை பிடிப்பதில் காங்கிரசுக்கு சவால் விடுக்கும் நிலையில் இருப்பதாக தெரிகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டுக்குமே இடையே சம அளவிலான வெற்றிவாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் இந்த 5 மாநில தேர்தலில் வெற்றியை பாஜக பெறுகிறதா அல்லது காங்கிரஸ் கட்சி பெறுகிறதா என்கிற கேள்வி ஒரு புறம் இருக்க , ஆம் ஆத்மீ கட்சி டெல்லியை தாண்டி தேசிய கட்சியாக உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
English Summary
Aam Aadmi.! - Alternative power emerging at the national level.