KOLNews

ஆம் ஆத்மீ அபார வெற்றி ..! - மக்களின் வெற்றி..!, என கேஜரிவால் பெருமிதம்

கடந்த சனிக்கிழமை 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றதையடுத்து , வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை காலை 8 மணி தொடங்கி நடைபெற்றது. 

தற்போதைய நிலவரப்படி, கிட்டத்தட்ட ஆம் ஆத்மி கட்சி 63  இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதிகியுள்ளதையடுத்து , தில்லியில் 3வது முறையாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைவது நிச்சயமாகியுள்ளது.

இந் நிலையில்,ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், 

 'தில்லி தேர்தல் வெற்றி ஆம் ஆத்மியின் வெற்றி அல்ல; தில்லி மக்களின் வெற்றி. மூன்றாவது முறையாக எங்களுக்கு வெற்றியை கொடுத்த தில்லி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வெற்றியை தில்லி மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்' என்றார் .

அத்துடன், 'தில்லி மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. தொடர்ந்து  மக்களுக்காக உழைப்போம். நாட்டில் புதிய வகையான அரசியல் பிறப்பதற்கு தில்லி தேர்தல் முடிவுகள் அடித்தளமாக அமைந்துள்ளன. நாட்டின்  முன்னேற்றத்திற்கான அரசியலை மக்கள் அங்கீகரித்துள்ளனர்' என்று தெரிவித்தார்.

English Summary

Aam Aadmi wins ..! - Kejriwal in proud

Latest Articles

KOLNews