KOLNews

குறி வைக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ..? - திடீர் துப்பாக்கி சூட்டில் கட்சி தொண்டர் பலி

டில்லியில் நேற்று சட்டசபைக்கு நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, ஆம் ஆத்மீ கட்சி வெற்றி பெற்ற  நிலையில், அங்கு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கி யால் சுட முயன்றனர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாலும் , கட்சி தொண்டர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் 

டில்லி மெஹரூலி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நரேஷ் யாதவ் என்ற எம்.எல்.ஏ. தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து கோவிலுக்கு சென்று  விட்டு நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அருணா ஆசிப் அலிகான் மார்க்சாலை அருகே  மர்ம நபர்கள் எம்.எல்.ஏ. மீது துப்பாக்கியால் 4 ரவுண்டுகள் சுட்டனர். இதில் எம்.எல்.ஏ. காயமின்றி உயிர்தப்பினார். கட்சி தொண்டர் அசோக் மான் என்பவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.

இது குறித்து உயிர்தப்பிய எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் கூறுகையில், தேர்தலில் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாமல் என்னை கொல்ல சதி செய்துள்ளனர். தலைநகரில் சட்டம் ஒழுங்கு நிலைமை சரியில்லை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி என்றார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ. மீது நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, துப்பாக்கியால் சுட்ட நபர் யார் என்பது குறித்து டில்லி போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

English Summary

AAP marked MLA ..? - Party Volunteer Kills In Sudden Firing

Latest Articles

KOLNews