KOLNews

முந்தைய ஆட்சியில் முறைகேடு..! -அமைச்சர் மா.சு பகீர் தகவல்

இன்று சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,முந்தைய ஆட்சியில் கொரோனா பணியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆகவே அது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

அமைச்சர் மா.சுப்பிரமணியகடத்தின் இந்த கருது கரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்வஹிக்கு வந்து இதுவரை முந்தைய ஆட்சியின் எந்த முறைகேடு குறித்தும் பெரிதாக பேசப்படாத நிலையில்,அமைச்சர் மா.சு  போட்டிருக்கும் குண்டு அதிமுக வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாகியுள்ளது 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சு., அதிமுக ஆட்சி காலத்தில் மருத்துவ பணியாளர்கள் ஒரு நபரின் ஒரு நாள் உணவு செலவு 570 முதல் 600 ரூபாயாக இருந்ததாக தெரிவித்தார் அத்துடன், விசாரணை மேற்கொண்ட போது உணவகமே வைத்திருக்காதவர்கள் இடைத்தரகர்கள் போல செயல்பட்டு வெளி இடத்தில் உணவை வாங்கி முறைகேடாக பணம் பெற்று வந்தது தெரியவந்துள்ளதாகவும், சிறந்த உணவகங்களில் அரசே நேரடியாக பேசியதன் விளைவாக தற்போது ஒரு நபருக்கான உணவு விலை 350 மதல் 450  ரூபாயாக குறைத்துள்ளதாக கூறினார. இதேபோன்ற மருத்துவ பணியாளர்க்குக்கான தங்கும் விடுதி கட்டணம் கடந்த ஆட்சியில் 900 ரூபாயாக செலவழிக்கப்பட்டதாகவும் , தற்போது அது 750 ரூபாயாக குறைக்கப்பட்டுளாதாகவும் தெரிவித்தார இதனால் நாள் ஒன்றுக்கு 10 வடாம போய் சேமிக்கப்படுவதாக கூறினயா அமைச்சர், ஆகவே,இந்த முறைகேடு தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

English Summary

Abuse in the previous regime ..! -Information of Minister Ma.Su.

Latest Articles

KOLNews