KOLNews

பிரதமரின் ஆசைக்கு முரணாக செயல்படுவதா..? - கமல் ஹாசன் வேண்டுகோளில் நடுக்கமா..?

சென்ற ஜூலை 23-ந்தேதி பிரபல சினிமா இயக்குனர் மணிரத்னம் உட்பட நடிகை ரேவதி, நடிகர் அனுராக் காஷ்யாப், தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, சமூக சேவகர் பினாயக் சென், சமூக ஆர்வலர்கள் ஆஷிஷ் நந்தி போன்ற  49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.

அக்கடிதத்தில், இந்தியாவில் நடைபெறும்  சிறுபான்மையினர் மீதான வன்முறை சம்பவங்களை கண்டித்தும், இந்த விவகாரங்களில் உடனடி தலையீடு வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

Image result for mani ratnam

இந்நிலையில் இக்கடிதம் நாட்டின் நற்பெயரை கெடுப்பதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி பீகாரை சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, கடந்த 4-ந்தேதி, இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பீகார் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு நாடெங்கும் உள்ள எதிர்க்கட்சியை சார்ந்த அரசியல் தலைவர்களும், பிற துறை சார்ந்த சிலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கமல்ஹாசன் வேண்டுகோள்

இணக்கமான இந்தியாவை பிரதமர் விரும்புகிறார். நாடாளுமன்றத்தில் பிரதமரின் அறிக்கைகளும் அதையே உறுதி செய்கின்றன. அதை மாநிலங்களும், அதன் சட்டங்களும் பின்பற்ற வேண்டாமா? பிரதமரின் ஆசைக்கு முரணாக என் சக கலைஞர்கள் 49 பேர் மீது தேச துரோக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்கள். சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட்டு, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் பீகாரிலிருந்து போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஒரு குடிமகனாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

என அதில் பதிவிட்டுள்ளார்.

பிரதமரையோ, அரசையோ விமர்சிக்காமல் 49 பேருக்காக கமல் விடுத்திருக்கும் கோரிக்கை சற்று அச்சத்துடனே வெளியிட்டது போல் தெரிகிறது.

English Summary

Acting contrary to the Prime Minister's wish ..? - Kamal Haasan pleads

Latest Articles

KOLNews