KOLNews

இணைந்தார் நடிகை நமீதா..! - மேலும் பலம் பெற்ற தமிழக பாஜக..!

தன் ரசிகர்களை அன்புடன் 'மச்சான்ஸ்' என அழைக்கும் நடிகை நமீதா பாஜக செயல்தலைவர் நட்டா முன்னிலையில் பாஜக வில் இணைந்தார்.

ஏற்கனவே  நடிகை நமீதா,அ.தி.மு.க., வில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்,முன்னணி கவர்ச்சி கதாநாயகியாக வலம் நடிகை நமீதா, அதன் பின்  பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அதிமுகவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினார் . 

இந்நிலையில் தற்போது திருவள்ளூரில் நடந்த விழாவிற்கு வந்த நட்டா முன்னிலையில் நமீதா, பா.ஜ., வில் இணைந்தார். அப்போது பா.ஜ., வின் முரளிதர் ராவ், எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர். முன்னதாக இன்று காலை நடிகர் ராதாரவி பா.ஜ.,வில் இணைந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை நமீதா, தமிழகத்திற்கு நன்மை செய்யவே பா.ஜ.க., வில் இணைந்தேன். நம் தேசத்திற்காக, பிரதமர் மோடி அதிகம் உழைக்கிறார். அதனாலேயே நான் பா.ஜ.க.,வில் இணைந்தேன் என்றார்.

English Summary

Actress Namitha joins in! - More powerful Tamil Nadu BJP ..!

Latest Articles

KOLNews