KOLNews

ஜனவரிக்கு பின்பே, அடுத்த கட்ட அரசியல் நகர்வு ..! - மு.க.அழகிரி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி. கடந்த 2013-ம் ஆண்டு கட்சியில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்ட பின், தன்மைத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு வெளிப்படையாக எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை என்கிற தோற்றமே இருந்து வருகிறது. இருப்பினும், மு.க.அழகிரி, கலைஞர் திமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவார் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன. திமுக இளைஞர் அணிக்கு தலைமை தாங்கும் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியைப் போலவே, தனது மகன் தயாநிதிக்கும் அதே போன்ற ஒரு பொறுப்பை தனது புதிய கட்சியில் வழங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

அத்துடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது, அதாவது  நவம்பர் 21ம் தேதி, அழகிரி அவரை சந்தித்து பேச கூடும் என்கிற வகையிலும் செய்திகள் உலா வருகின்றன. அதற்கு முன்பாக  நவம்பர் 20- ஆம் தேதி மதுரையில், மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக வதந்திகள் பரவின. ஆனால், இதை மறுத்துள்ள  மு.க.அழகிரி  , அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும்  ஜனவரி அல்லது அதற்கு பிறகு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடததி அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அறிவிப்பதாகவும் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்  மு.க.அழகிரி.

English Summary

After January, the next phase of the political move ..! - MK Alagiri

Latest Articles

KOLNews