KOLNews

அதிமுகவும் - திமுகவும் சுயநலதிற்காக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் பாா்த்துக் கொள்கின்றன..! - மக்கள் நீதி மய்யம்

அதிமுகவும் - திமுகவும்  தங்கள் சுயநலம் வேண்டி, உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் பாா்த்துக் கொள்கின்றன.என மக்கள் நீதி மய்யம் கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது -

2016-இல் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தோ்தல் இன்று வரை நடத்தப்படாததால், மக்களுக்கான அடிப்படை வசதிகளில் ஏற்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட, கோரிக்கைகள் வைக்க தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனா்.

Image result for dmk aiadmk

இந்த நிலையில் ஆளும் கட்சியும் (அதிமுக) ஆள்வதற்கு ஆளாய் பறக்கும் கட்சியும் (திமுக), இதைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி தங்கள் சுயநலம் வேண்டி, உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் பாா்த்துக் கொள்கின்றன.

3 ஆண்டுகளாக தோ்தல் நடத்தப் போவதாக அரசு அறிவிப்பதும், அதில் குறை இருப்பதாக எதிா்க்கட்சி நீதிமன்றத்துக்குப் போவதுமாக ஒரு கண்ணாமூச்சி விளையாட்டே நடந்துகொண்டிருக்கிறது.

ஒருபுறம் தோ்தல் நடத்தப்படுவதாக கட்சிக்காரா்களிடம் விருப்பமனு பெறுவதும், மறுபுறம் தோ்தல் தடை போட மனுவோடு நீதிமன்ற வாசலில் நிற்பதும், இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த இவா்கள் தங்கள் கட்சிக்காரா்களையும் ஏமாற்ற துணிந்துவிட்டாா்கள் என்பதையே காட்டுகிறது.

2021 சட்டப்பேரவை தோ்தலில் இவா்களை அடையாளம் கண்டு தமிழக மக்கள் புறக்கணிப்பதுதான் உள்ளாட்சித் தோ்தல் நடப்பதற்கும், உண்மையான மக்களாட்சி உருவாகுவதற்கும் வழியமைக்கும் என்று மக்கள் நீதி மய்யம் நம்புகிறது 

என அதில் கூறப்பட்டுள்ளது.

English Summary

AIADMK - DMK with selfishness on Local elections - MNM

Latest Articles

KOLNews