KOLNews

இனி ..வேலை செய்யும் இடத்திற்கே 'அம்மா உணவக உணவு' - லாபம் யாருக்கு ..?

இன்று தமிழக பட்ஜெட் உரையை வழங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். 'அம்மா உணவகம்' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

Image result for north indians at Amma Unavagam

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்த 'அம்மா உணவகம்; மிக குறைந்த விலையில் உணவை அளித்து வருவது தெரிந்ததே.. விளிம்பு நிலை மனிதர்களிடம் மிக வரவேற்பை பெற்ற இத்திட்டத்தின் பயனை அவ்வப்போது ஓரளவு நடுத்தர மக்களும் அனுபவித்தே வருகின்றனர். 

குறிப்பாக நகர்ப்பகுதியான சென்னையில் இதை அதிகம் பயன்படுத்திக்கொள்பவர்களில்,கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு, அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கே உணவினை கொண்டு சென்று தரும் வகையில், இனி 'அம்மா உணவகம்' செயல்படும் என துணை முதல்வர் இந்த பட்ஜெட் உரையில் அறிவித்தார்.  

Image result for north indians at Amma Unavagam

இது பலரால் பாராட்ட பெற்றாலும், ஏற்கனவே வடஇந்தியர் பலர் அம்மா உணவகத்தில் உண்பதால், குறைந்த நேரத்தில் உணவுகள் காலியாகி விடுவதுடன் உள்ளூர் தொழிலாளிகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் நிலை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வேலை செய்யும் இடத்திற்கே கொண்டு சென்று உணவு தருவது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும், இது வட இந்தியர்களின் குடியேற்றத்தை அதிகரிக்கவே உதவும் என்பதையும் மறுப்பதற்கில்லை..

இத்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை நன்கொடைகள் மூலமாகவும் பெறப்படும் என தெரிகிறது.பற்றாக்குறையை அரசி நிதியிலிருந்து சரிசெய்யப்படும் என தெரிகிறது. 

இதற்காக, அரசு தற்போது பட்ஜெட்டில் 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக துணை முதல்வர் தெரிவித்தார்.

English Summary

'Amma unavakam' food at work site - who is the beneficiary..?

Latest Articles

KOLNews