KOLNews

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..! - அதிமுக கண்டனம்

கடந்த 2016 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று , போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அதிமுகவின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆனால், 2021 ஏப்ரல் மாதத்தில்  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதே கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார்  

இந்நிலையில், நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் , 

இவர் அமைச்சராக இருந்த போது கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து இந்த சோதனை நடத்த படுவதாக சொல்லப்படுகிறது.  . கரூரில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர் . லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையையொட்டி கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் 

EPS, OPS promise to maintain Tamil Nadu as best-governed State - Update  News 360 | English News Online | Live News | Breaking News Online | Latest  Update News

இந்நிலையில் அதிமுக தரப்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவை களங்கபடுத்தும் காழ்புணர்ச்சியோடு  காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் . விஜயபாஸ்கர் அவர்கள் மீது காவல்துறையை ஏவி விட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் தி.மு.க. அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,  அத்துடன்,எம்.ஆர் . விஜயபாஸ்கர்க்கு கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு , ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும் , அத்துமீறல்களையும் , தொண்டர்களின் துணையோடு , இதனை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர் . 

English Summary

Anti-corruption raid on former minister MR Vijayabaskar's house - AIADMK condemnation

Latest Articles

KOLNews