KOLNews

முக்கிய பொறுப்பில் அப்சரா ரெட்டி..! - அதிமுக அறிவிப்பு

அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளராக அப்சரா ரெட்டியும் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். அப்சரா ரெட்டி அண்மையில் காங்கிரசில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிசி உட்பட பல முன்னணி ஊடங்களில் பணியாற்றிய அப்சரா ரெட்டி பி.ஏ.ஜர்னலிசம் படித்தவர்.சிட்டி யூனிவர்சிட்டியில்  (லண்டன்) பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். 

முன்னதாகஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கி ணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

'தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூகத் தொடர்பு ஊடகங்களில், அண்ணா தி.மு.க.வின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதற்காக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் அப்சரா ரெட்டி என்பவர் இன்று முதல் இணைத்துக்கொள்ளப்படுகிறார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்கள், கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதற்காக, அப்சரா ரெட்டியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்", 

என தெரிவித்துள்ளனர்.

English Summary

Apsara Reddy in charge of the main ..! - AIADMK announcement

Latest Articles

KOLNews