KOLNews

திறமை இருந்தால் மக்கள் முன் விவாதிக்க தயாரா..? - ஸ்டாலினை மீண்டும் சீண்டும் முதல்வர்..!

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை அன்று தனது பரப்புரையின் போது ஊழல் குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் சவால் விட்டிருந்த நிலையில் அந்த சவாலை நிபந்தனைகளுடன் ஏற்று அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் இது தொடர்பாக நேற்று  ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில்,  "ஊழல் குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என ஸ்டாலினுக்கு சவால் விடுவதற்கு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டு வருமாறு ஸ்டாலின் கூறுகிறார். 

நீதிமன்றத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ஸ்டாலின் நேரில் வரட்டும். என்னென்ன ஊழல் செய்தோம் என சொல்லட்டும். நாங்களும் பதில் சொல்கிறோம். எது சரி என மக்கள் தீர்மானிக்கட்டும். மக்கள்தானே நீதிபதிகள். திறமை இருந்தால் ஸ்டாலின் நேரடி விவாதத்திற்கு வரட்டும் எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை"  என தெரிவித்தார்.

English Summary

Are you ready to discuss in front of people if you have talent ..? - CM teasing Stalin again ..!

Latest Articles

KOLNews