KOLNews

ரஜினி கூறியது போல் மக்களை மாற்றுவது காலத்தின் கட்டாயம்..! - துவங்கியது கையெழுத்து இயக்கம்..!

சமீபத்தில் தனது அரசியல் பார்வை குறித்து விளக்கிய ரஜினியின் கருத்துக்கு ஆதரவினை தெரிவிக்கும் வகையில் ஆங்காங்கே சில முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், திருச்சியில்,  மக்கள் சமூகநீதி பேரவை என்கிற அமைப்பு, அரசியல் மாற்றம் நடைபெறுவதற்காக நடிகர் ரஜினிக்கு ஆதரவாக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளாக தெரிவித்துள்ளது.

முன்னதாக அந்த பேரவையின் மாநில அமைப்பாளர் எஸ். கோவிந்தன், செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், 

"தமிழக அரசியலில் லஞ்சம், ஊழல் மலிந்துவிட்டது. அரசியல் கட்சிகள் கம்பெனிகளாக மாறிவிட்டன. கட்சிப் பொறுப்புகளும், அரசியல் பதவிகளும் சுயநலவாதிகளின் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. கட்சிகளின் பெயரால் கட்டப்பஞ்சாயத்து, ரெளடியிசம் அதிகரித்துவிட்டது.

இது போன்ற அரசியலை மாற்ற புதிய கொள்கைகளை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்ற முடிவு வரவேற்புக்குரியது. அமெரிக்காவிலேயே அதிபரை தேர்வு செய்யும் தேர்தலில் கட்சித் தலைமை ஒன்றாவும், அதிபருக்கு ஒருவரையும் தேர்வு செய்கின்றனர். இதே அடிப்படையில் தமிழகத்திலும் நல்லவர்கள் மட்டுமே ஆட்சிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். அவற்றை வழிநடத்த நேர்மையான கட்சித் தலைமை வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் கூறியதைப் போன்று 2021இல் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் ஏற்படவில்லையென்றால் பின்னர் எப்போதும் வாய்பபு இல்லாமல் போகும். அதற்கு மக்களை தயார்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஐஏஎஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நல்ல சிந்தனையாளர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அதற்கு ரஜினிகாந்த் தேர்வு செய்துள்ள அரசியல் பாதையே சரியானது. ரஜினியின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மக்களிடையே ஆதரவை திரட்ட பிரசாரம் செய்து வருகிறோம். மேலும், தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமையவும், நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தலைமையேற்கவும் வலியுறுத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளோம்" என கூறினார்.

அத்துடன்,  ரசிகர்கள் பலர் தங்களது ரத்தத்திலேயே கையெழுத்திட தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்ற பின், அதன் பிரதியை ரஜினியிடம் ஒப்படைப்போம் என தெரிவித்தார்.

 

ர்.

English Summary

As Rajini said, it is time to change the people ..! - The signature movement started ..!

Latest Articles

KOLNews