KOLNews

வழக்கம் போல்... கைதானார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்..!

சேலம்,  நேற்று, சேலத்தையடுத்த,குரங்குச்சாவடியில்,நடைபெற்ற 'வெற்றிவேல் யாத்திரை' மற்றும் பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உள்பட பலர் பங்கேற்று பேசினர். 

அப்போது பேசிய எல்.முருகன், “நாமெல்லாம் கடும் விரதம் இருந்து பாதயாத்திரை செய்து வழிபாடு நடத்திய முருகனை, கயவர் கூட்டம் கேவலமாக பேசியது. அதை யாரும்க ண்டிக்கவில்லை. பா.ஜ.க கண்டித்ததோடு

அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியே இந்த வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. டிச. 7ம் தேதி திருச்செந்துாரில் இந்த யாத்திரை நிறைவடையும். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.கதான் அதிக இடங்களைக் கைப்பற்றப் போகிறது” என்று கூறினார்.

முன்னதாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெற்றிவேல் யாத்திரைக்கு அங்கு திரண்டுருந்தவர்கள்  கட்சி கொடியுடன், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி நின்றிருந்தனர்.

 அனுமதி மறுக்கப்பட்ட (?) வெற்றிவேல் யாத்திரைக்கு, 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடு, கூட்டம் முடிவடைந்ததும் வெற்றிவேல் யாத்திரைக்கு கிளம்பும் முன் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

English Summary

As usual ... BJP state president L Murugan arrested ..!

Latest Articles

KOLNews