KOLNews

அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை..! - ஜெ.தீபா உருக்கம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் நிலையில், தீர்ப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.

 சென்னை ஐகோர்ட்டு நேற்று வழங்கிய தீர்ப்பில்,  தீபா, தீபக்கிடம் 3 வாரத்துக்குள் வேதா இல்லத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  தீபா, 

தனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா தன்னை கைவிடவில்லை என தான் நினைப்பதாகவும், தங்களது குடும்பட்டோரின் ஆன்மா தான் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்ததன் பின்னணியில் இருப்பார்கள் என்பதே தன து நம்பிக்கை என்பதாகவும், அதிமுக ஆட்சியில் அத்தையோட வீட்டை கைப்பற்றியது முதல் நிம்மதி இல்லாமலேயே  தான் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன், முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்கு செல்லமாட்டார் என நம்புவதாக தெரிவித்த தீபா, தனது அத்தையோட வீட்டுக்கு செல்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும்  சகோதரர் தீபக் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துபேசிய பிறகே அத்தையோட வீட்டுக்கு செல்வது பற்றி பேச முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

English Summary

Aunty Jayalalithaa's soul did not abandon me ..! - J.Deepa

Latest Articles

KOLNews