KOLNews

அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு..! - மக்கள் மனதில் திக்..திக்..

அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வானது சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உபி. மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில், பல நீதிமன்ற விசாரணைகளுக்கு பின்  இறுதியில் வழக்கின் தீர்ப்பு  தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றத்தால்  ஒத்திவைக்கப்பட்டது.. 

Image result for ayodhya case

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வருகிற 17-ந் தேதி ஓய்வுபெறுவதால் அதற்கு முன்னர் தீர்ப்பை பிறப்பிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியது.

இதனிடையே, தற்போது அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வானது சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Image result for ayodhya case judgement

முன்னெச்சரிக்கையாக, சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு, அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட பின்னர் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக உ.பி மாநில அரசும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு பணியில் 4,000 மத்திய போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

English Summary

Ayodhya case verdict tomorrow at 10.30 am

Latest Articles

KOLNews