KOLNews

சில நாட்களில் அயோத்தி தீர்ப்பு..! - 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்பு

உ.பி,மாநிலம் ,அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 பேர் மேல்முறையீடு செய்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

Image result for Ayodhya verdict in a few days ..! - 4 thousand paramilitary forces

இந்நிலையில், தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து விரும்பத்தகாத விளைவுகள் நடந்து விடாதபடிக்கு பார்த்துக்கொள்வதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்துக்கு, குறிப்பாக அயோத்திக்கு பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான உத்தரவு ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய நிலம் அமைந்திருக்கும் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. அங்கு ஏற்கனவே 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

தீர்ப்பு வெளியானதும் ஏதும் பதட்டம் ஏற்படுமோ என்கிற கலக்கத்தில் அயோத்தி அருகே வசித்து வரும் மக்கள், இப்போதே அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரிக்க துவங்கி உள்ளனர்.

அதே போல, வதந்திகளை பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது . திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்துமாறு மக்களை அறிவுறுத்தி உள்ள மாநில அரசு, பள்ளிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் தீர்ப்புக்குப்பின்னரும் சுமுகமாக இயங்கும் வகையில்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

English Summary

Ayodhya verdict in a few days ..! - 4 thousand paramilitary forces

Latest Articles

KOLNews