KOLNews

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் ? - இன்று தெரியும்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இருப்பினும், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக் நிலையே தொடர்கிறது . டெல்லி ஐகோர்ட்டு அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து வந்தது. சென்ற வியாழக்கிழமை விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. ஆகவே ப.சிதம்பரத்துக்கு அமலாக்கப்பிரிவு வழக்கில் ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று தெரிந்துவிடும். இந்த வழக்கிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டால், 100 நாட்களுக்கு மேலான சிறைவாசத்தை முடித்துக்கொண்டு அவர் வெளியே வருவார்.

English Summary

Bail to PC Chidambaram? - You know today

Latest Articles

KOLNews