KOLNews

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் ..! - மாறா உறுதியுடன் வைகோ..!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவோம்,  என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.

கடந்த 1991-இல் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை அடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் தடைக்காலம் முடிவடையும் நேரத்தில் தடை நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த முறை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிப்பு தொடா்பாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீா்ப்பாயம் சாா்பில் கருத்துக் கேட்பு கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. புதுதில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சாகல் தலைமையில் அரசு விருந்தினா் மாளிகையில் 4 நாள்கள் விசாரணை நடைபெறுகிறது.

தீா்ப்பாய முதல் அமா்வில் வைகோ பங்கேற்றாா்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தொடா்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக விசாரணையில் நான் பங்கேற்றுள்ளேன். எனது கருத்தை எடுத்து வைப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி உறுதி அளித்துள்ளாா். தீா்ப்பாய விசாரணையில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவா் உருத்திர குமாரன் சாா்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் பாரிவேந்தனும் ஆஜராகியுள்ளாா்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை தொடா்ந்து நீட்டிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. அதனால்தான் தடைக்காலம் இரண்டு ஆண்டுகள் என்று இருந்ததை 5 ஆண்டுகள் என்று அரசு மாற்றியது. 

விடுதலைப்புலிகள் மீதான தடை அா்த்தமற்றது. எனவே தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவோம். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் செய்யாத தவறுக்காக 7 தமிழா்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களை விடுவிக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். எனவே 7 தமிழா்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றவாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் .

English Summary

Ban on LTTE - With constant determination Vaiko ..!

Latest Articles

KOLNews