KOLNews

கன்னடா்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நாளை முழு அடைப்பு..! - உற்று நோக்கும் நேரமிது..!

பல மொழிகள் பேசப்படும் இந்தியாவை மொழிவாரி மாநிலமாக மாற்றியதில், பல சமூக முன்னேற்ற நடவடிக்கைகளை அந்தந்த மாநிலம் அதன் நிலப்பரப்பு, கலாச்சாரம், இயற்கை வளம், வாழிவியல் சூழலுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ள முடியும். இருப்பினும் அதற்கு வழி வகை செய்யும் விதத்தில் மாநிலங்களுக்கான உரிமை முழுமையாக கட்டமைக்கப்படவில்லை. 

இதனால், அண்டை மாநிலங்களிலிருந்து வருவோர் , சம்பத்தப்பட்ட மாநிலத்தினரின் வேலைவாய்ப்புகளில் போட்டியிடும் போது பிரச்சனைகள் எழுகின்றன. 

பொதுவாக மாநில உரிமை குறித்து பேசுவதே தேசநலனுக்கு எதிரானது என்கிற பொது புத்தியை பலர் வளர்க்க முயன்றாலும், வாழ்வியல் சூழலால், அதை கையிலெடுக்கும் நிலைமைக்கு  அந்தந்த மண்ணின் மைந்தர்கள் தள்ளப்படுகிறார்கள்.

Image result for job for locals

.வேலைவாய்ப்புகளில் சொந்த மாநிலத்தவர்கே முன்னுரிமை என்கிற நிலைப்பாட்டை, மஹாராஷ்டிரா, ஆந்திர போன்ற மாநிலங்கள் எடுத்த நிலையிலும், தமிழகத்தில் இது குறித்து பேசுவதே தேசவிரோதமாக சிலரால் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது, பெங்களூரு: தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கர்நாடகாவில் நாளை முழு அடைப்பிறகு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு  அழைப்பு விடுத்துள்ளது.

Image result for job for locals

.இது குறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருப்பதாவது - 

கா்நாடகத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகள் கழிந்துள்ள போதும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநில அரசு வேடிக்கை பாா்த்து வருகிறது.

ஆகவே நாங்கள், சரோஜினி மகிஷி அறிக்கை அமல்படுத்தக்கோரி கடந்த 100 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். இருப்பினும் அரசு எங்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனையடுத்து அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், வியாழக்கிழமை கா்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

அத்துடன், இந்த முழு அடைப்பிற்கு 700 க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.. இதில் 40 மடாதிபதிகள் உள்ளிட்ட 30 ஆயிரம் போ் கலந்து கொள்வாா்கள் என எதிா்ப்பாா்க்கிறோம். ஒருவேளை சரோஜினி மகிஷி அறிக்கை அமல்படுத்துவதாக அரசு உறுதி அளித்தால், போராட்டத்தை திரும்பப்பெறுவோம் , 

என சொல்லப்பட்டுள்ளது.

கன்னட சங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து , தமிழக அரசியல் கட்சிகளை குறை கூறும் தேசியவாதிகள் கருத்து தெரிவித்தால் நன்றாகயிருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

English Summary

Bandth urging reservation for Kannadigas .. - It's time to look up!

Latest Articles

KOLNews