KOLNews

திவாலா சட்டத்தில் திருத்தம் தேவை..! - வைகோ

கரும்பு விவசாயிகள் பயன் பெரும் வகையில், திவால் சட்டத்தில் திருத்தும் செய்யப்படவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூபாய் ஆயிரத்து 834 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தரக்கோரி கரும்பு விவசாயிகள் அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி, கோட்டூர் ஆகிய இடங்களில் இயங்கி வந்த திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த ஆண்டு திவால் நோட்டீஸ் அளித்துவிட்டது.. விவசாயிகளுக்கு தெரியாமல் அவர்கள் பெயரில் எஸ்டேட் வாங்கி கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூபாய் 350 கோடி கடன் பெற்று, சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

தற்போது நடைமுறையில் உள்ள திவால் சட்டம் விதிமுறைகளின்படி கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, திவால் நோட்டீஸ் அளித்துள்ள சர்க்கரை ஆலைகளிடமிருந்து கைப்பற்றப்படும் சொத்துக்கள் மூலம் பெறப்படும் நிதியை, முன்னுரிமை அடிப்படையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க ஏதுவாக திவால் சட்ட விதிமுறைகள் திருத்தம் கொண்டு வர வேண்டும்,  என வைகோ தெரிவித்துள்ளார்.

English Summary

Bankruptcy law needs to be amended ..! - Vaiko

Latest Articles

KOLNews