KOLNews

அடிப்படை மரபு..! காற்றில் விட்டதா மத்திய அரசு .? - மேற்கு வங்க மெட்ரோ துவக்க விழாவுக்கு மம்தாவுக்கு அழைப்பு இல்லை..!

பொதுவாக மாநிலங்களில் நடைமுறைக்கு வரும் முக்கிய திட்டங்களின்  துவக்க விழாவிற்கு , சம்பத்தப்பட்ட மாநில முதல்வரை அழைப்பது முறை. அது எதிர்க்கட்சி ஆளும் மாநிலமாக இருந்தாலும் இந்த நடைமுறையை பின்பற்றுவது மரபாக உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கக் கூடிய புதிய மெட்ரோ வழித்தட துவக்க விழாவுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இன்று,  மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், மேற்கு வங்க மாநிலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கக் கூடிய  முதற்கட்ட மெட்ரோ வழித்தடத்தைதுவக்கி வைக்கிறார். ஆனால் இந்த துவக்க விழாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

அதனையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் எம்பி காக்கோலி கோஷ் தஸ்திதார் மற்றும் எம்எல்ஏ சுஜித் போஸ் ஆகியோர் மெட்ரோ துவக்க விழாவைப் புறக்கணிக்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Image result for kakoli ghosh dastidar

அத்துடன், இது குறித்து, பேசியுள்ள காக்கோலி கோஷ், 

"2009-2011இல் மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது அவரால் கொண்டுவரப்பட்டதுதான் கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தட திட்டம். ரயில்வே பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கியது மம்தா பானர்ஜிதான். தற்போது, இந்த திட்டத்தின் துவக்க விழாவுக்கு அவருக்கு அழைப்பு இல்லை. இது மேற்கு வங்க மக்களுக்கு ஏற்பட்ட அவமானமாகும்" என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

English Summary

Basic legacy ..! Did the federal government left in the air? Mamata not invited for West Bengal Metro inauguration

Latest Articles

KOLNews