KOLNews

பணமதிப்பிழப்பு குறித்து பாஜக எம்.எல்.ஏவின் 'சேம் சைடு' கோல் ..! - இன்னும் மறக்காத நெட்டிசன்கள்

கடந்த 2016, நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. தற்போது மூன்றாண்டு கடந்த நிலையில்,  பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது, ராஜஸ்தான் கோட்டா பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பவானி சிங் ராஜாவத் பேசிய ஒரு வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. 

அந்த  பாஜக எம்.எல்.ஏ ஒரு வீடியோவில், 'மத்திய அரசு 2016, நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே, அதானி, அம்பானி உள்ளிட்டோர் இதுகுறித்து தெரிந்திருந்தனர். அவர்களுக்கு குறிப்புடன் இது தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப அவர்கள் முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்' என்று குறிப்பிட்டார். 

அதோடு நிறுத்தாமல் , 'பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே மாற்று ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும். புதிய நாணயத்தை தேவைக்கேற்ப அச்சிட்டிருக்க வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிடப்படாத ஒன்று. படிப்படியாக இதனை செயல்படுத்தியிருக்கலாம்' என்றும் கூறியிருக்கிறார்.

 

English Summary

BJP MLA's 'Same Side' goal on Demonetisation - Still unforgettable netizens

Latest Articles

KOLNews