KOLNews

அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை அளிக்கும் சிறப்பான ஆட்சியை பாஜக அளித்துவருகிறது ..! - அமித்ஷா பெருமிதம்..!

பாஜக அரசு, சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை அளிக்கும் சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது, என்று பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார் 

முன்னதாக, விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், 

"ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் அந்த மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தேசத்தின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் காக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த 75 நாள்களில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டது. இருப்பினும், கடந்த 72 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பல முறை ஆட்சியில் இருந்த நிலையில் கூட  இதனைச் செய்யவில்லை. இதற்கு வாக்கு வங்கி அரசியல்தான் முக்கியக் காரணம்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சரியான முடிவுகளைத் துணிச்சலுடன் செயல்படுத்துவது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழலுக்கு சிறிதும் இடம் கொடுக்காதது மிகப்பெரிய சாதனை. ஆகவே, கடந்த தேர்தலைவிட இப்போது கூடுதல் இடங்களை பாஜகவுக்கு மக்கள் அளித்துள்ளனர். மேலும், இந்த வெற்றி ஹரியாணா உள்ளிட்ட பல மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் தொடரும்.

பாஜக அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஏழை, எளிய மக்களின் மேம்பாடு, விவசாயிகளின் நலன் காப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை அளிக்கும் சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. உலக அளவில் இந்தியாவுடன் அனைத்து நாடுகளும் நட்புறவையே விரும்புகின்றன. இதற்கு பிரதமரின் ஆளுமைத்திறனமும், ராஜ்ஜிய உறவுகளை சிறப்பாக நிர்வகிப்பதும்தான் முக்கியக் காரணம். நமது ராணுவத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் உள்நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களும் அதிக அளவில் இந்தியாவுக்குப் படையெடுத்து வருகின்றனர். முப்படைக்கும் சேர்த்து ஒரு தளபதி நியமிக்கப்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின அறிவிப்பு நமது நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்", என்றார் . 

English Summary

BJP provides good governance for all sector of People..! - Amitisha proud!

Latest Articles

KOLNews