KOLNews

மு.க.ஸ்டாலிலனை புகழ்ந்து தள்ளிய பாஜக மாநில துணைத்தலைவர்.!

புதுக்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் பாஜக மாநில துணைத்தலைர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அரியணை ஏறுவார் என பேசியுள்ளது  அரசியல் வட்டாரத்தில் பலரின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது.

முன்னதாக இன்று காலை  திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், பாஜக மாநில துணைத்தலைர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.     

  Image result for mk stalin age

அப்போது  பேசிய அரசகுமார், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியுடனான தன் நினைவுகளை பேசிய அவர், அவரது மகன் ஸ்டாலின் பக்கம் தன பேச்சை திருப்பினார். 

அப்போது அவர் கூறுகையில், நான் அன்று பார்த்ததில் இருந்து தற்போது  வரை ஒரே மாதிரி உடற்கட்டுடன் இருக்கும் தலைவர் ஸ்டாலின் தான். உண்மையைச் சொல்வதென்றால் எம்ஜிஆருக்கு அடுத்து தான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின். இப்போது யார் யாரையோ அடுத்த முதல்வர் என்கிறார்கள். அதே வார்த்தையை நாம் ஸ்டாலினுக்கும் பயன்படுத்த வேண்டாம். பல்லாண்டு காலம் அந்தப் பதவிக்கு அருகில் இருந்தும் அதை முறைகேடாக அடைய நினைக்காதவர் அவர்.

தான் ஜனநாயக வழியில் முதல்வர் ஆக வேண்டும் என்பதையே அவர் விரும்புவார். அதற்காக அவர் காத்திருக்கிறார். விரைவில் அதற்கான காலம் கனியும்.  ஸ்டாலின் தமிழகத்தின் அரியணை ஏறுவார்.

என அவர் தெரிவித்தார். 

அவரின் இந்த பேச்சை அங்கிருந்த திமுகவினர் வெகுவாக ரசித்தனர்.

English Summary

BJP state vice president praised MK Stalin

Latest Articles

KOLNews