KOLNews

பாஜக அதிகாரத்திற்காக அலைகிறது..! - பட்னாவிசுக்கு பதிலடி கோடுத்த உத்தவ் தாக்கரே..!

மராட்டிய சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற்ற நிலையிலும் , முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியதையடுத்து அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

இந்நிலையில்,  சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரி ஆக்க அமித் ஷா உதவி தேவையில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேவேந்திர பட்னாவிஸ்  பேட்டியை கேட்டதும் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தாக்கரே குடும்பம் பொய் சொல்வதாக முதல் முறை குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையுடன் நிற்க வேண்டும் என்ற எனது தந்தையின் வழியில் நான் நிற்கிறேன். நிச்சயம் ஒருநாள் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரி ஆவார் என பால்தாக்கரேவிடம் ஏற்கெனவே நான் உறுதி அளித்திருக்கிறேன். அதனை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். அதற்காக அமித் ஷா மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் உதவி தேவையில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எங்களது கதவுகள் திறந்தே உள்ளன. பாஜக எங்களை ஏமாற்றிவிட்டது. அதனால் அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 

சிவசேனா பொய்யர்களின் கட்சி அல்ல. பாஜக எதிரி அல்ல. ஆனால், அக்கட்சி பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். பாஜக அதிகாரத்திற்காக அலைகிறது.  தவறான நபர்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதாக நான் உணர்கிறேன்.  அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

என அவர் கூறினார்.

English Summary

BJP wandering for Power ..! - Uddhav Thackeray retaliates against Patnavis

Latest Articles

KOLNews