KOLNews

'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமிட மறுத்த ஆட்டோ ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல்..!

"ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிட வற்புறுத்தி தாக்கும் சம்பவம் மீண்டும் ஒரு முறை அரேங்கேறியுள்ளது. 

இந்த முறை ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் இந்த அடாவடி கும்பலிடம் சிக்கியவர் 52 வயதான  காஃபர் அகமது என்ற ஒரு அப்பாவி ஆட்டோ ஓட்டுநர். 

சம்பவம் குறித்து காவல்துறையின் முதல் தகவலறிக்கையில்(FIR) பதிவான தகவலின் படி, 

வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில், அருகிலுள்ள கிராமத்தில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது, ​​ஒரு காரில் இருந்த இருவர் அவரைத் தடுத்து சிகரெட்  கேட்டுள்ளனர். காஃபர் சிகரெட்டை கொடுத்ததும், அதை வாங்க மறுத்த அவர்கள்  "மோடி ஜிந்தாபாத்" மற்றும் "ஜெய் ஸ்ரீ ராம்" என கோஷமிட வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே காரிலிருந்தவர்கள் இறங்கி வந்து காஃபரை அடிக்க துவங்கியதுடன் அவரது ஆட்டோவையும் தாக்கியுள்ளனர். 

Muslim Auto Driver Brutally Assaulted For Refusing to Chant

இதற்கிடையே, சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் காஃபர் அஹமது கூறுகையில், தனது தாடியை பிடித்து இழுத்து பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் எனக் கூறி மீண்டும் அவர்கள் தாக்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல் நடத்திய கும்பல் கைக்கடிகாரத்தையும் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். பற்கள் உடைந்த நிலையில், வீங்கிய கண்களுடனும், முகத்தில் காயத்துடனும் பரிதாபமான கோலத்தில் காஃபர் அகமது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் குறித்து காவல் துறை சார்பில், புகார் அளிக்கப்பட்ட  தாங்கள்  ஷம்பு தயால் ஜாட், (35), மற்றும் ராஜேந்திர ஜாட், (30). என்கிற இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்ததாகவும் . குற்றம் சாட்டப்பட்டவர்கள் மது போதையில் சம்பந்தப்பட்டவரை தாக்கியுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Brutal attack on auto driver who refused to chant 'Jai Shri Ram' ..!

Latest Articles

KOLNews