KOLNews

கூட்டணியை, 'கும்பல்' என கூறுவதா..? - அமித்ஷாவுக்கு, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி கண்டனம்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அம்மாநிலத்தில் ஊரடங்கை அறிவித்து பிரதான எதிர்க்கட்சி தலைவர்களை வீட்டு சிறையில் வைத்தது மத்திய அரசு. பின் பல மாதங்கள் கழித்து அடுத்தடுத்த தளர்வுகளை கொண்டு வந்ததுடன் எதிர்க்கட்சி தலைவர்களை விடுதலை செய்தது. 

Gupkar Declaration Turns Into A Political Alliance To Restore Article 370  In Jammu And Kashmir

அதன் பின், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்பதற்காக உருவாக்க ஒன்றிணைந்த காஷ்மீர் எதிர்க்கட்சிகள், 'குப்கர்' கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில், தேசிய மாநாடு, காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக, குப்கர் கூட்டணி அறிவித்துள்ளது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, குப்கர் கூட்டணியை, "குப்கர் கும்பல்" என்று விமர்சித்துள்ளார். 

Such a slippery slope: How Omar Abdullah is Kashmir's master of U-turns and  swerved narratives

இதனை கண்டித்துள்ள குப்கர் கூட்டணியின் தலைவர் உமர் அப்துல்லா,  தங்கள் கூட்டணி தேர்தலில் போட்டியிடாது என்ற எண்ணத்துடன் இருந்த அமித்ஷா, தற்போது, தங்களது முடிவால் ஏமாற்றம் அடைந்துள்ளதன் காரணமாகவே விரக்தியில் விமர்சித்திருப்பதாகவும், தனது  டிவிட்டர் பதிவில்  தெரிவித்துள்ளார். 

Mehbooba Mufti detention case: SC asks J&K administration to respond to plea

அதே போல, அரசியல் ஆதாயத்துக்காக பல கூட்டணிகளை அமைத்துக் கொள்ளும் பாஜக, பிற அரசியல் கட்சிகள், நியாயமான நோக்கங்களுக்காகக் கூட கூட்டணி அமைக்கக் கூடாது என கருதுவதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியும்  குற்றம் சாட்டியுள்ளார்.

English Summary

Calling the alliance a 'gang'? - Omar Abdullah, Mehbooba Mufti condemn Amitsha

Latest Articles

KOLNews