KOLNews

முடியாது ..! - ஓ.பி.சி. பிரிவினருக்‍கு 50 சதவீத இட ஒதுக்‍கீடு குறித்து மத்திய அரசு\

நடப்பாண்டு, மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு  இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன. இந்நிலையில் தமிழக அரசு மற்றும் அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள், மேற்கண்ட இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அதையடுத்து இதனை  விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது, இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படி உத்தரவிட்டது. அத்துடன், இது பற்றிய சட்ட வரையறைகளை 3 மாதங்களில் உருவாக்கும்படியும், அதற்காக சிறப்பு குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.

அதன் பின், இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் இன்று தாக்‍கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நடப்பாண்டில் ஓ.பி.சி. பிரிவினருக்‍கு 50 சதவீத இட ஒதுக்‍கீடு வழங்க முடியாது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

English Summary

Can not ..! - 50% reservation for OBC sections

Latest Articles

KOLNews