KOLNews

ஜல்லிக்கட்டுக்கு ராகுல் வரலாமா.? - திசை திருப்ப பார்க்கிறதா பாஜக..?

தமிழகத்தில் இளைஞர்கள் முன்னெடுத்த, ஜல்லிக்கட்டு தடைக்கான எதிரான போராட்டத்தின் போது, தேசிய அளவில் ஜல்லிக்கட்டு பேசும் பொருளானது. அப்போது, ஜல்லிக்கட்டு குறித்த புரிதல் இல்லாத பல அறிவுஜீவிகளும், பீட்டா அமைப்பு ஆதரவாளர்களும் அதனை எதிர்த்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்த புரிந்த இல்லாத போக்கு கட்சி பாகுபாடின்றி பல கட்சிகளிலும் இருந்தது. தேசிய கட்சிகளிலில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இருந்ததை போலவே எதிர்ப்பாளர்களும் இருந்தனர்.  அந்த வகையில் காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‛பல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 2014ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தோம். அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால், மோடி அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சி,' எனப் பேசியிருந்தார்.

Jairam Ramesh Tenders Apology To Vivek Doval In Defamation Case

இந்நிலையில், தற்போது ஜல்லிக்கட்டை காண காங்கரஸ் எம்.பி ராகுல் காந்தி வருகை தர உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது திமுக- காங்கிரஸ் கூட்டணியின் எதிர் அணியான அதிமுக- பாஜக வினரிடையே சற்று கலக்கத்தை, குறிப்பாக பாஜகவிடம் அதிகம் ஏற்படுத்தியுள்ளது. 

ஆகவே இதனை எதிர்கொள்ளும் விதமாக,ஜெய்ராம் ரமேஷ் பேசியிருந்ததை சுட்டிக்காட்டி,  Jallikattu, GoBackRahul என்னும் ஹாஷ்டகை சமூக வலைத்தளங்களில் முன்வைக்கிறார்கள்  தமிழர்களுக்கு எதிரான கட்சி என்கிற பிம்பம், காங்கிரசுக்கு முன்பு  ( இலங்கை இறுதி கட்ட போர் சமயம்) இருந்தது உண்மை தான். ஆனால் பாஜக முந்தைய மோடி ஆட்சி காலத்திலிருந்தே , தொடர்ந்து தமிழகம் கேட்காத திட்டங்களை புகுத்தியும், கேட்கும் திட்டங்களை தவிர்த்தும் வந்து, தாங்கள் தான் தமிழர்களுக்கு எதிரான அக்மார்க் எதிர்ப்பாளர்கள் என்பது போல் நடந்து கொண்டுவிட்டது பாஜக. 

GoBackRahul Trends Worldwide – Expressing India

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல் காந்தி வருவது, தமிழகத்தில் தேசிய கட்சிக்கான இடத்தை காங்கிரசிடமிருந்து லாவகமாக பறித்துவிடலாம், என்கிற பாஜகவின் ஆசைக்கு இடையூறாக  இருக்கும் என்பதால், நாங்கள் மட்டுமல்ல காங்கிரசும் தமிழர்களுக்கு எதிரான கட்சிதான் என தமிழக மக்கள் மனதில் பதியவைக்க ஜெயராம் ரமேஷின் பேச்சை கையிலெடுத்துள்ளது பாஜக.

எது எப்படியாயினும், இங்கு தேசியக்கட்சிகள் திராவிட கட்சிகளை அண்டியே தான் அரசியல் நடத்தப்படவேண்டும் என்னும் எழுதப்படாத விதி வந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பது தான் யதார்த்த உண்மை.

English Summary

Can Rahul come to Jallikattu? - Is BJP trying to divert ..?

Latest Articles

KOLNews