KOLNews

தீபாவளியை கொண்டாடலாமா..? - கொளுத்தி போட்ட அருள்மொழி..!

தமிழகத்தில் காலூன்ற மத சம்பத்தப்பட்ட விஷயங்களை கையிலெடுத்து பாஜக அரசியல் செய்வதாய், பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்  நிலையில், அவர்கள் மெல்லுவதற்கான அவலை தரும் வேலையை திராவிட சித்தாந்தை கையிலெடுப்பவர்கள்  தொடர்ந்து செய்து கொண்டு தான் வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது தீபாவளி கொண்டாடலாமா.? என்னும் கேள்வியை முன்வைத்து வழக்கறிஞர் அருள்மொழி 'கைத்தடி' தொலைக்காட்சியில்  ஆற்றியுள்ள உரை ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. தீபாவளியை தமிழர்கள் கொண்டாடுவது முழுக்க முழுக்க அர்த்தமற்ற ஒன்றாக கருதும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளது.

ஏற்கனவே மனுநீதியில் குறிப்பிட்திருப்பதாக சில கருத்துக்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசிய நிலையில்  திருமாவளவனே அப்படி பேசியதாக பாஜக மற்றும் இந்து இயக்கங்களால் சர்ச்சை கிளப்பபட்டது. அந்த விவகாரம் சற்று தணிந்த நிலையில், தற்போது அருள்மொழி திராவிடர்கள் தீபாவளி கொண்டாடுவது முரணான ஒன்று என்பது போல் பேசியிருப்பது, எது போன்ற எதிர்வினைகளை உருவாக்குமோ தெரியவீல்லை. 

English Summary

Can we celebrate Deepavali ..? - Arulmozhi question

Latest Articles

KOLNews