KOLNews

இந்த நேரத்தில் கூடவா அரசியல் செய்வீங்க..? - சோனியாவை சாடும் பாஜக தலைவர்கள்

காங்கிரஸ் தலைவா் சோனியா, ‘கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, தேவைக்கு ஏற்ற வகையில் திட்டமிடாமல் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தி விட்டது; இதனால், லட்சக்கணக்கானோா் பல இன்னல்களை அனுபவித்து வருகிறாா்கள்’ என்று  குற்றம்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், அவரது குற்றச்சாட்டுக்கு தனது கட்டுரை பதிவில் பதிலளித்துள்ள உள்துறை அமைச்சா் அமித் ஷா கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளூா் அளவிலும், உலக அளவிலும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மலிவான அரசியல் செய்கிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களைத் தவறாக வழிநடத்துவதை விடுத்து நாட்டு நலன் குறித்து காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.

Plan to Double Snow Leopard Numbers: Minister Prakash Javadekar

அதே போல மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகரும், 

"கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதில் தொடங்கி ஒவ்வொருவரையும் ஒன்றிணைத்து பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அவரது முயற்சிகளுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன.

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் நாம் அனைவரும் ஒரே திசையில் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது. கரோனாவை ஒழித்துக் கட்டிய பிறகு நாம் அரசியல் பேசலாம்" என்று கூறியுள்ளார்.

JP Nadda succeeds Amit Shah as BJP national president, elected ...

இதற்கிடையே பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, "பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ஒட்டுமொத்த நாடும் கரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஊரடங்கை சோனியா காந்தி விமா்சிப்பது அா்த்தமற்ற, நாகரிகமற்ற செயல்" என்று காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார்.

English Summary

Can you do politics at this time ..? - BJP leaders criticising Sonia

Latest Articles

KOLNews