KOLNews

ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் எம்.பி. மீது வழக்குப்பதிவு - பொய்யான தகவல் அளித்ததாக குற்றச்சாட்டு

ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகனான ரவீந்திரநாத் எம்.பி. ஆகிய 2 பேர் மீதும், தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக அளிக்கப்பட்ட  புகாரின் அடிப்படையில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னதாக தேனி மாவட்ட தி.மு.க. இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மிலானி என்பவர், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக அளித்த 2 மனுக்களின் அடிப்படையில்,  தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும்.  நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

அதன் அடிப்படையில்,  ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 125 (ஏ)-ன் கீழ் தனித்தனியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

English Summary

Case on OPS and Rabindranath MP - Allegation of giving false information

Latest Articles

KOLNews