KOLNews

கட்சியில் மாற்றம் இருக்கலாமே தவிர கொள்கையில் மாற்றம் இருக்காது ..! - குஷ்பூ 'பலே' விளக்கம்..!

பாஜகவில் இணைந்தது குறித்து நடிகை குஷ்பு தெரிவித்திருப்பதாவது - 

இன்று நான் மிக மகிழ்ச்சியுடன் பாஜகவில் சேர்ந்து இருக்கிறேன். 10 ஆண்டுகளாக அரசியலில் இருந்ததற்கு அப்புறம், நாட்டு மக்களுக்கு எது நல்லது, நாட்டுக்கு எது நல்லது என்பதை உணர்ந்து பாஜகவில் சேர்ந்து இருக்கிறேன். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும், நாடு முன்னேற வேண்டும் என்றால் பிரதமர் மோடி போல ஒரு தலைவர் இருக்க வேண்டும்.அப்போதுதான் நாடு முன்னேற முடியும். அதை உணர்ந்த பின்னர்தான் பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறேன். 

பா.ஜனதாவில் சேரும் முடிவு முன்கூட்டியே எடுக்கப்பட்டது. ஆனால் இருக்கும் இடத்துக்கு விசுவாசம் காட்ட வேண்டும் என்பதால், காங்கிரசில் இருந்து கொண்டு வேறு யாருக்கும் சாதகமாக பேச முடியாத நிலையில் பாஜகவை விமர்சித்தேன். காங்கிரசில் என்னை ஒடுக்கியவர்களின் பெயரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யாரை சொல்லி இருக்கிறேன் என்பது கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு தெரியும்.

பாஜகவுக்கு எதிராக மிக கடுமையாக நான் பேசி இருக்கிறேன். ஆனால் போக போகத்தான் நாட்டுக்கு நல்லது எது? என்று புரிந்தது..பாஜகவை எதிர்த்து நான் கடுமையாக பேசி இருந்தாலும், இதுவரை பா.ஜனதா தலைவர்கள் மேல் எந்தவித ஊழலும் இல்லை. மசோதாவில் தவறு இருக்கிறது என்றால் அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் தடுத்து இருக்க வேண்டும். தடுப்பதற்கான பெரும்பான்மை காங்கிரசிடம் இல்லை. ஏன் இல்லை?, மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை.பாஜக மீது நம்பிக்கை இருந்ததால் மீண்டும் பாஜகவையே ஜெயிக்க வைத்துள்ளனர். மோடி மீது நம்பிக்கை அதிகமாக உள்ளது.

கட்சியில் மாற்றம் இருக்குமே தவிர, எனது கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது. அப்படியேத்தான் இருக்கும். பொதுவாக அரசியல்வாதி என்பதைவிட ஒரு சமூக செயற்பாட்டாளர் என்றே என்னை நான் சொல்வேன். எனவே, நான் வெளிப்படையாக பேசுவேன்.

என கூறினார் அவர் .

English Summary

Change in the party but there will be no change in policy ..! - Khushboo 'Clever' Description ..!

Latest Articles

KOLNews