KOLNews

கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை ..!

மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களை சந்தித்து, முறையே தொல்வியையும் வெற்றியையும் கண்ட நிலையில், அதிமுகவில் பதவி நியமனங்கள், கட்சியில் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கம் என அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி புதனன்று இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் படி அறிவிக்கப்பட்டுள்ளதாவது-

அதிமுக அமைப்புச் செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன், செ.தாமோதரன் ஆகியோர் நியமிகப்படுகின்றனர்.

தேர்தல் பிரிவு இணைச் செயலாளராக கோபாலகிருஷ்ணனும், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலராக தாமோதரனும் நியமிகப்படுகின்றனர்.

இதுவரை அதிமுகவில் இரண்டு பிரிவுகளாக இருந்த கடலூர் மாவட்டம் தற்போது கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

கடலூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் நியமனம்; மேற்கு மாவட்ட செயலாளராக அருண்மொழித்தேவன், கிழக்கு மாவட்ட செயலாளராக கே.ஏ.பாண்டியன் நியமனம் செய்யப்படுகின்றனர்.

என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Changes in party management: OPS-EPS joint statement..!

Latest Articles

KOLNews