KOLNews

பூட்டானில் நுழைந்த சீனா.? - பிரதமரை விமர்சிக்கும் ராகுல் காந்தி

சீனா இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்றான பூட்டானுக்குள் சட்டவிரோதமாக இரண்டு கிராமங்களை கட்டமைத்து வருகிறது. இது குறித்த செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியதன் மூலம்,  டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ட்விட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், சம்பத்தப்பட்ட செயற்கை கோள் புகைப்படங்களை மேற்கோள் காட்டி விமர்சித்துள்ளார். 

அதில், "மோடி அரசு முதலில் நமது நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்தது, தற்போது அதனை மீட்கும் நடவடிக்கையை எடுக்காத செயலற்ற தன்மையால் நமது நெருங்கிய அண்டை நாடுகளையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால், உங்கள் நண்பர்களுக்காக எப்படி நிற்பீர்கள்?"என கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.

English Summary

China enters Bhutan? - Rahul Gandhi criticizes the Prime Minister

Latest Articles

KOLNews