KOLNews

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை..? - மத்திய அரசு சொல்வது என்ன ..?

மத்திய அரசு, இலங்கையிலிருந்து தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என தெரிவித்துள்ளது . 

ஏற்கனவே, திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ளவர்கள்  தாங்கள் , தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும் தங்களை தாயகம் திரும்பியவர்களாக கருதி இந்திய குடியரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை  விடுத்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தனர்.  அப்போது, இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி , மனுதாரர்கள் தங்களுக்கு இந்திய குடியரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார் . 

இந்நிலையில், இதனை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்த வழக்கு நேற்று  தலைமை நீதிபதி திரு . சஞசீப் பானர்ஜி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது  மத்திய அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனபதால் வேர்க்குக்கு குடியரிமை வழங்க முடியாது என தெரிவித்தார் . தனி நீதிபதி மனதாரரின் கோரிக்கையை பரிலேனை செய்யடத்தரவிட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இதன் அடிப்படையில் மத்திய அரசு மனுவை பரிசீலனைசெய்து அவர்களுக்கு  குடியரிமை வழங்கலாம் அல்லது மனுவை நிராகரிக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.

அதன் பின், தமிழக அரசு சார்பாகவும் எதிர் மனுதாரர்கள் சார்பாகவும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்டு 23ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

English Summary

Citizenship for Sri Lankan Tamils ..? - What does the central government say ..?

Latest Articles

KOLNews