KOLNews

விரைவில்..'வெற்றிவேல் யாத்திரை' ..! - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது - 

பாஜக மகளிரணி சார்பில் அக்டோபர் 27-ஆம் தேதி திருமாவளவனை கண்டித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும்  போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அத்துடன், மருத்துவப்படிப்பில்  7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்பதே தான் தங்கள்  நிலைப்பாடு என்றும், ஆளுநர் எடுத்து கொண்ட நேரம் போதுமானது 7.5 சதவீத ஒதுக்கீடு மசோதா விரைவில் ஒப்புதல் தர வேண்டும் என்ற எல்.முருகன்,  'தமிழகத்தில் பாஜக சார்பில் 'வெற்றிவேல் யாத்திரை' விரைவில் தொடங்க உள்ளது தமிழகத்தில் நவம்பர் 6 முதல் டிசம்பர் வரை வெற்றி பெறும் வரை நடைபெறும் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்' என்று தெரிவித்தார். 

English Summary

Coming soon .. 'Vetrivel yatra' ..! - Tamil Nadu BJP leader L Murugan 'new' announcement ..!

Latest Articles

KOLNews