KOLNews

வகுப்புவாத அரசியல் முறியடிப்பு..! - கேஜரிவாலின் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடந்து முடிந்த தில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கேஜரிவாலுக்கும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் 

மும்முனை போட்டி நிலவும் என சொல்லப்பட்ட தில்லி சட்டசபை தேர்தலின் முடிவில் காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்காத நிலையில், பாஜக 8 தொகுதிகளிலும்,  ஆம் ஆத்மீ 62  தொகுதிகளும் முன்னிலையில் இருந்தன.

இந் நிலையில், தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கேஜரிவாலுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கேஜரிவாலுக்கும் எனது வாழ்த்துக்கள். வளர்ச்சித் திட்டங்கள் வகுப்புவாத அரசியலை முறியடிக்கிறது என்பது தேர்தல் முடிவுகள் மூலமாக நிரூபணமாகிறது

கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய நம்பிக்கைகள் நம் நாட்டில் பலப்படுத்தப்பட வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

English Summary

Communal political breakdown ..! - MK Stalin congratulates Kejriwal on his victory

Latest Articles

KOLNews