KOLNews

மத்திய பிரதேச சட்டசபையில் நாளை நம்பிக்கை ஒட்டெடுப்பு..?

அண்மையில், மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக மற்றொரு காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். அதையடுத்து, அவருடைய ஆதரவாளர்களான, 22 காங் கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும்  தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அதில், ஆறு பேரின் ராஜினாமாவை ஏற்கனவே சபாநாயகர் பிரஜாபதி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளை அடுத்து, சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மற்றும் ராஜினாமா செய்த 16 காங்., எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் கமல் நாத் அரசு சட்டசபையில் நம்பிக்கை ஒட்டெடுப்பு நடத்தி பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின் நீதிமன்றம் பின் வருமாறு உத்தரவிட்டுள்ளது- 

நாளை மாலை 5 மணிக்கு, முதல்வர் கமல்நாத் அரசு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அத்துடன் ஓட்டெடுப்பு குறித்து நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். ராஜினாமா செய்த 16 காங்கிரஸ் .எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டெடுப்பில் பங்கேற்க விரும்பினால் மாநில காவல்துறை அதற்கான பாதுகாப்பை தர வேண்டும்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English Summary

Confidence motion in Madhya Pradesh Assembly tomorrow

Latest Articles

KOLNews