KOLNews

எடை குறைந்ததற்காக ஜாமீன் கேட்ட காங்கிரஸ் தலைவர்..!

காங்கிரஸ் தலைவரான சஜ்ஜன் குமாருக்கு 1984-ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கிய கலவரம் தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் திஹார் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு சஜ்ஜன் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.   

அதையடுத்து, அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 11 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தனது உடல் எடை 10 கிலோ வரை குறைந்து விட்டதாலும், தனது வயதை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும், என சஜ்ஜன் குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, 'எடை குறைகிறது என்பதை காரணமாகக் கொண்டு உங்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. தேவையான மருத்துவ உதவிகள் நீதிமன்றத்திலேயே செய்து தரப்படும்' என்று தெரிவித்துவிட்டது.

அதோடு, சஜ்ஜன் குமார் உடல் நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து நான்கு வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

English Summary

Congress leader asked for bail on weight loss ..!

Latest Articles

KOLNews