KOLNews

ஏழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்..! - கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்

நேற்று, கரோனா நோய்த்தொற்றின் (கொவைட்-19) தாக்கம் தொடா்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் செயற்குழு அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. , 

அதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி,  ‘‘இந்த நெருக்கடியான சூழலில் ஏழைகளுக்கு, முக்கியமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யவில்லை. இந்தத் தருணத்தில் ஏழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும். நாட்டிலுள்ள முதியோா்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

நுரையீரல் பாதிப்பு, நீரிழிவு, இதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவா்களை கரோனோ நோய்த்தொற்று எளிதில் தாக்கி வருகிறது. எனவே, அத்தகையவர்களை கண்டறிந்து மாநில அரசுகள் அவா்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்று கூறினார்.

English Summary

Congress must ensure that the poor are protected ..! - Rahul's appeal to the party

Latest Articles

KOLNews