KOLNews

நாட்டை காங்கிரஸ் காக்கும் ..! காங்கிரசை நேரு குடும்பம் காக்கும்..! - மக்களவை காங்கிரஸ் தலைவரின் கணிப்பு..!

நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் மக்களை ஈர்க்கும் சக்தி உள்ளதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது...

வலுவான கொள்கைப் பிடிப்புடன் இந்தியா முழுவதும் பரவியுள்ள காங்கிரஸைப் போன்ற ஒரு கட்சியால்தான் பாஜக-வின் மதவாத அரசியலுக்கு பதிலடி கொடுக்க முடியும். மாநிலக் கட்சிகள் செயல்பாடுகையில் காணும் பொழுது அவை விரைவில் முக்கியத்துவத்தை இழக்கும் என்று தோன்றுகிறது. அவை முக்கியத்துவத்தை இழக்கும்போது நாடு இரு துருவ அரசியலை நோக்கி நகரும். அந்தச் சூழலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். எனவே காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. மாநிலக் கட்சிகளுக்கு காங்கிரஸ் போன்றதொரு தேசியக் கட்சிக்கு இருப்பதைப் போல் மக்கள் ஆதரவு இல்லை.

காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு மீண்டும் வர சோனியா காந்திமிகவும் தயங்கினார். ஆனால் ராகுல் காந்தியின் ராஜிநாமாவைத் தொடர்ந்து கட்சி ஒரு நெருக்கடியை சந்தித்த நிலையில் மூத்த நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று தலைவர் பதவியை ஏற்க சோனியா சம்மதித்தார்.  அவர் நெருக்கடியான நேரங்களில் எல்லாம் கட்சியை வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையில்தான் கட்சியால் இக்கட்டான நேரங்களில், 2004 மற்றும் 2009 என இரு முறை ஆட்சி அமைக்க முடிந்தது.

சோனியா காந்தி தற்போது கட்சியின் இடைக்காலத் தலைவராக இருக்கும் அதே நேரத்தில், கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியை வழிநடத்துவது மிகவும் கடினம்.

வணிகத்தை போலவே, அரசியலிலும் ஒரு குறிப்பிட்ட பெயர் மற்றும் புகழ் அவசியம். இப்போதைய பாஜகவை கவனித்தால் நரேந்திர மோடி அல்லது அமித் ஷா இல்லாமல் அக்கட்சி சுமுகமாக இயங்குமா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியிலும் நேரு குடும்பத்துக்கு ஒரு பெயர் இருக்கிறது. அதில் எந்தத் தவறும் இல்லை. அக்குடும்பத்தினருக்கு இருப்பதைப் போன்ற மக்களை ஈர்க்கும் சக்தி கட்சியில் வேறு யாருக்கும் இல்லை. இது எதார்த்த நிலையாகும் என்று அதீர் ரஞ்சன் சௌதரி கூறினார்.

English Summary

Congress will save the country! Nehru family will save The Congress - Loksabha Congress leader

Latest Articles

KOLNews