KOLNews

காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டம்..! - கலந்துகொள்ளாத திமுக..!

தலைநகர் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தில்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இன்று, இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லோக் தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி. ராஜா ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் மற்றும் அகமது படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏற்கனவே, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என முன்னதாகவே தெரிவித்துவிட்டன, 

அண்மையில் நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக, காங்கிரஸ் இடையே இருந்த சுமூக உறவில் உள்ள பிரச்சனைகள்  காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரியின் அறிக்கை மூலம் வெளிபட்டது தெரிந்ததே..

இந்நிலையில் தற்போது திமுக பிரதிநிதிகள் யாரும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

English Summary

Congressional opposition parties meet - DMK not attending ..!

Latest Articles

KOLNews